அஞ்ஞானம்

(ஸ்ரீ. விஜயலட்சுமி)

 

இருள் சூழ்ந்த என் மனதில் இறைவன் புகுந்தது தெப்படி?

 

அந்தகன் எனக்குள் ஆத்மீகம  மலர்ந்தது எப்படி?

 

ஸ்தூல சீஷ்மம் எதுவென என்னத அறிவிலி எனக்குள்ளாக

 

தெய்வம் புகுந்து என்னை தெய்வீகமாக மாற்றியது எப்படி?

 

அன்ஞானம் நிறைந்த என் இதயத்துள்

 

இஞ்ஞானம் தான் சிறந்ததென

 

ஆசையை அகற்றி விரக்தியை புகுத்தி

 

ஓசையை தான் எனத் தெரிவித்து

 

விரக்தியை வளர்த்து விவரம் தெரிவித்து

 

விலை மதிப்பற்ற வாழ்வினை புரியவைத்து

 

பாச பாண்டம் மறந்து பாவத்தை போக்க வழி வகுத்து

 

கேட்காத ஒரு வரத்தை கேட்குமுன் கொடுத்து

 

அன்பரியாத பேதை மனதில் வழி காட்டி

 

துன்பத்தை போக்கி இன்பம் இதென சொல்லி

 

தெய்வமே உன் நிழலை எனக்குள் புகுத்தி

 

தோய்ந்  என மனதில் இருளை போக்கி

 

சிதைந்திருந்த என் எண்ணங்களை

 

சிறக்க வைத்த இறைவா நீ வாழ்க