சின்னவன்

 

ஒரு மகனை கேட்டேன், எல்லாவற்றிலும் சிறந்தவனாக

அவன் கொடுத்தான் ராமனை என் தகுதிக்கு மேல் தந்து

விட்டாயே என்ன விலை கொடுப்பேன் இவனுக்கேன்றேன்

 

செய்  தவம என்னென்பேன்

தெய்வம் தண்ட வரப்ரசாதம்

அக்குழந்தைக் கொரு வாரிசு

அதே மாதிரி வேண்டும் என்றேன்

 

இந்த பிடி அதை விட சிறந்தது

சிந்திக்காமல் வாங்கிக் கொள் இவனை

முந்தையப் பெயர்வைப் பயனே

முற் செய்த தவமோ நான்?

 

அழகே உருவானான் ஆண் பிள்ளை ஒன்று

எல்லோரும் தலையால், இவன் காலால்

பிருஅக்கும் போதும் தொல்லை இல்லை

அதற்கு பின்பும் மொவ்னமே உரு

 

அழகே உருவு, அறிவில் அவானான்

கண்டோர் அள்ளிக் கொள்வர்

கன்னிக் கவரும் நிறம்

ஏழு வயது வரை நடை இல்லை

 

அன்றும் அதிகப்படி பேச்சில்லை

வாய் பேசமாட்டன் மவ்னத்தின் எல்லை 

வாய் திறந்தால் முத்து உதிரும்

வாய்மை மிகுந்த ஒரு சொல் வரும்

 

வலிமை மிகுந்த ரத்தினக் கல்,

நடை, உடை, பாவனை

நல்லதொரு சாதனை

 

ரமண என்று பெயரிட்டோம்

ரமணரையும் மிஞ்சி விட்டான்

மந்திலென்ன சாத் வீக்கம்

 

மாசில்லா தெளிந்த அறிவு

அன்று மறைந்த ரமண பகவான்

இந்தூர் இவன் உரு எடுத்தாரோ?

 

ஐந்து வயதினிலேயே ஆசிரியராணன்

"இந்தியா" என்றப் பத்திரிகைக்கு

மனதையடக்கி "நான்" என்பதையடக்கி

தனக்குள் அடங்கி தானாகவே ஆனான்

 

அவன் வளர்ந்தது, தாய் எனக்கே தெரியாது

எப்படி எவன் என் மகனான்னான்

என  அகந்தை மனம் எவன் முன்

ஒன்றும் இல்ல சூனியம் ஆய் விட்டதே

 

அன்பே, அறிவே, அடக்கமே, அமைதியே

என்னுள் இரைன்ந்த ஆத்மா சக்தி நீ

பிள்ளையல்ல நீ, என் குரு

பேசாமலே உபதேசம் செய்த உனக்கு

 

எப்படி இவ்வளவு ஆத்மா சக்தி?

வாயடித்து, கைஅடித்து, வித்தைகாட்டும்

மாய மனிதர் முன் வாய  ேசாமல்

மொவ்னமே உருவானாயே அதெப்படி?

 

உன்னடக்கம் எனக்கில்லேயே

உன்னைப் பெற்ற தாய்யாயினும்

இன்று ஒரு உன்னதப் பதவி உனக்கு

கடல் கடந்தை, கற்காத பாடமில்லை

 

என்றேனும் மறந்தேனும் உன்னைப்பற்றி

பெருமையாகப் பேசிஇருப்பிய?

நானே அறியாத மகத்துவம் நீ

பலர் சொல்லி நானறிந்தேன்

 

உண் உன்னதம் இவ்வளவென்று

எப்படியேனும் பிறரைச் சொல்ல வைத்து

பெருமை கொண்டாடும் இவ்வுலகில்

எப்படியடா நீ உதித்தாய்?

 

உண்மையின் சொருபமாக?

ஒருவனுக்கு ஒருத்திஎன

மனதிர்க்குகுந்த வனுடன்

மதிர்ப்பிர் சிறந்து வாழ்கிறாயே

 

அன்னனுக்கேற்ற தம்பியை

என் இரு செல்வங்களே

நான் பெற்ற செல்வங்களே

அருகதையற்ற தாய்ஒருத்தி

 

ஆசிர்வதிக்க அஞ்சுகிறேன்

படைத்தவனை வேண்டுகிறேன்

பல்லாண்டு உன்னை வாழவைக்க

 

என் சொத்து ஆயிளும்

உஅந்தே ஆகட்டும் என் கண்ணே

உன்னை ஈன்ற நாளை

நன்னாளாக வாழ்த்துகிறேன்