எங்கள் வீட்டு லக்ஷ்மி
            by S. Vijayalakshmi

ரமா என்றால் லக்ஷ்மி அவளும் ஒரு லக்ஷ்மிதான்

ரமணீயமான குணம் ரம்யமான பேச்சுமுண்டு

உடலும் மிகவும் மிருது உள்ளம் மிகப் பெரியது

இன்று ஒரு பொறுப்பான குடும்பதலைவி எங்கள் ரமா

 

தன் பதவியை உணர்ந்து சிறப்புடன் செய்வாள்

உருக்கமான மனம் உற்சாகமான பேட்சு

உள்ளத்தில் ஒரு குழந்தை தீங் கெனாத மனம்

அன்பே உருவானவள் சில வேளை தீ பறக்கும்

ஏனென்று அவளுக்கும் தெரியாது பிறருக்கும் அது புரியாது

 

மிகச் சிறந்த குடும்பத் தலைவி இன்முகம் எப்போதும் உண்டு

கலகலப்புடன் பேட்சு கள்ளமில்லாத மனம்

அறிவு மிக்கவள் ஆண்டவனிடம் பக்தி அதிகம்

சிறப்பான உபசரிப்பு சில சமயம் சிடு சிடுப்பு

வாய் வார்த்தையில் தேனுண்டு அதுவே சிலபோது கசப்புண்டு

 

மனதில் சூது கிடையாது மாசற்ற குழந்தைத்தனம்

உண்மைக்கும் போலிக்கும் வேற்றுமை தெரியாது

சில சமயம் நமக்கே அவளைப்பற்றி புரியாது

 

மாமியார் மெச்சிய மருமகள் மனதுக்கு உகந்தவள்

நானும் சுவாதி அவளும் சுவாதி

அதனால் தானோ இப்படி?  அதனால் என்ன?

என் மறுபதிப்பு அவள் அவளை நான் மகளாகதான  ஏற்றேன்

 

இருபத்தி ஐந்து வருடங்களாக அவள் எங்கள் கண்கள்

பலர் மத்தியில் அவளிருந்தாள  பளிச்சென்று தனியாய் தெரிவாள்

சில சமயம் த்ரிசால ஞானி சில பொது அவள் ஒர் அஞானி

எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவதுண்டு

பிறர் அது புரியமால் தடுமாறுவதுண்டு

 

அவள் ஒரு க்ரிகலக்ஷ்மி அவள் பெயர் ராஜலக்ஷ்மி

முயன்றால் எல்லாம் முடியும் அதற்க்கு அவள் ஒரு சாட்சி

அயல்நாட்டிற்கு சென்றாள  அங்கு ஒரு பதவி தேடினால்

எல்லாம் அவள் சிறப்ப  மனம தளராத முயற்சி

 

அவள் பெற்ற இரு செல்வங்கள் பகவான் தந்த அருள் கடாக்ஷங்கள்

எல்லாம் எங்கள் வாரிசு என்ற எண்ணம் தோன்றும்போது

என்னே அவன் கருணை, என்று வியக்க தோன்றுகிறது

அவனுக்கு நன்றி சொல்கிறேன் இவர்களை அடைந்ததற்கு