மனிதன்
வாயொன்று பேசும் மனமொன்று எண்ணும்
வாயினில் இனிமே, மனதில் இல்லை தூய்மை
வேதாந்தி என்ற எண்ணமுண்டு
வேறு விதம் நடப்பதுண்டு
தன்னைத் தவிர எண்ணமில்லை
பிறரைப்பற்றி எதுமேயில்லை
கருணை மிக்க பேய்சுண்டு
காரசாரம் மனதிலுண்டு
சுயநலம் மனதிலுண்டு, சுற்றிலும் கண் நாட்டமுண்டு
பிறரிடம் பிரியமுண்டு பின்னாலே பேசும் குணமுண்டு
உன் மனம் நீ அறியாய் பின் எப்படி பிறர் உன்னை?
உள்ளொன்று வெய்த்து புறமொன்று பேசுகிறாய்
உண்மைக்கு உவமையாய் உள்ளவரை ஏசுகிறாய்
காரியத்தில் கவனம் உள்ளே கண்யமான நடை புறத்தே?
ஆணவத்தை மறைப்பதற்கு அழகான நடையுண்டு
தெய்வத்தின் பிறப்பு, மனதிலென்ன கருப்பு?
சிறப்பான பேட்சுண்டு, சிறியதோர் மனமுண்டு
மனிதனென்றால் போதுமா? மனிதாபிமானம் வேண்டாமா?
எல்லாவற்றிக்குள்ளும் உன் ஆத்மா
என்ற எண்ணம் வேண்டாமா?
வாலாட்டும் நாயிடம் கூட நன்றி நிறைய உள்ளதே
தாலாட்டி வளர்த்த தாயிடம், உனக்கு அது இல்லையே
மனமொன்று கொடுத்தானே
மனிதனக்கு மட்டும்தான்
மாசில்லா எண்ணங்கள் மட்டும்
அங்கு வாழ வேண்டுமென்று
சாரமுள்ள மனம் கொடுத்தான்
சற்றாகிலும் யோசித்தாயா?
சலனமுள்ள மனிதனே
வேதாந்தம் பேசுகிறாய், ஜீவாத்மா பரமாத்மா
வேரில்லாத மனமே, வேண்டாம் இந்த வேதாந்தம்
ஜீவகாருண்யம் பேசுகிறாய், ஜீவனெல்லாம் ஒன்றென்று
நாயைக் கண்டால் கல்லை எடுப்பது நீயா அல்லது நாயா?
ஆளை அசத்தும் பேட்சு ஆஷாடபூபதி அவனாச்சு
விபூதிக்குள் வினைஇருக்கு விளையாட்டுப் பேட்சில் விழமிருக்கு
காந்தியடிகள், தெரசா என்று பேசாத நாளில்லை
சாந்தியுள்ள மணமுண்ட? தெளிவான சிந்தனை உண்டா
வினையாலே வீடு கட்டி, விதியின் பேரில் பழியைப் போட்டு
அவன் தந்த உடலதையும், இவன் பெற்ற உள்ளத்தையும்
தந்தானே ஒருவன் அவனையல்லவா சொல்ல வேண்டும்
நந்தவனத்து ஆண்டி, நாலாறு மாதமாய் குவனைத் வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி, கூத்தாடி கூத்தாடி அதைப் போட்டு உடைதாண்டி
சித்தர்கள் அன்றே சொன்னார்கள், சித்தம் இப்படி ஆகுமென்று
எல்லாரும் பல்லக்கில் ஏறினால் எப்படி?
எண்ணிய இறைவன் படைத்தானே ஒரு சிலரை
அவர்களும் மனிதர்களே அவனுடைய படைப்பு
மனிதருள் மாணிக்கம் மகாத்மா காந்தியடிகள்
மனிதருள் தெய்வாம்சம் தெரசா அன்னை என்பவர்
ரமணன் என்றால் தெய்வீகம் பகவானின் அவதாரம்
கருணையின் தத்வாம்சம் கண்ணியத்தின் பிறப்பிடம்
ராமகிருஷ்ண பரமஹம்ஸ, சாரதா அவருடைய மறு அம்சம்
விவேகாநந்த சுவாமிகள், விவேகத்தின் உருவே அவர்
பரமபிதா ஏசு என்றால், பார்வையற்றோருக்குமே கண் வருமே
இவர்களும் மனிதர்களே நானும் ஒரு மனிதனே
எனக்குமுண்டு இக்குணங்கள்
கொஞ்சம் செய்த பூர்வ புண்ணியம்
மனதில் சிறிது நல்லெண்ணம்
அப்போதைக்கு இப்போதே சொல்லி விட்டேன்
அடுத்த பிறவி ஒன்று உண்டானால்
மனிதாய் மட்டும் வேண்டாமே