மூத்தவன்
ஒரு சின்னப்
பெண் வேண்டினால்
ஒரு நாள்
சிறப்பான ஒரு
குழந்தை வேண்டுமென்று
நீயே ஒரு
குழந்தை உனக்கெதற்கு
ஒன்று
தாதா தடுத்தார்
பிறர் தடுத்தனர்
குடம்பத்தை விட்டு
ஒருவனுடன்
குடித்தனம் பண்ண
வந்து விட்டால்
நாள் பார்த்து
நக்ஷத்திரம்
பார்த்து
நல்ல நாளில்
உருவாயிற்று
ஒரு சிசு
உதித்த
நாள் முதல்
தாயின் வயிற்றில்
உதைத்து உதைத்து
உயிறேடுத்தான்
உற்றதொரு பிள்ளைக்காக
உயிரை திரனமாய் மதித்தாள்
பாத்து மாதம்
முடிந்துக்
கூட
வெளியில் வர
அவனுக்கு
விருப்பமில்லை
துடித்தால் அழுதால்
பிள்ளை மேல் பாசத்தினால்
துன்பம் பொறுத்தாள்
பல நாள்
ஒரு வழியாய்
பிறந்தான்
அவன்
ஸ்ரீ ராமன்
பிறந்த நாளிலே
அவனும் நல்ல
நாளுக்காக
காதிருந்தனோ
உலகைக்கான
அழகாய் மகன்
பிறந்தான்
அறிவுக் கூர்மை
அப்பவே தெரிந்தது
(முகத்தில்)
ஐந்து வயது
வரும் வரை, அட்டகாசம்
தாங்கவில்லை
ஆனாலும்
போருதர்கள், அடுத்து
சாதுவாகும்
என்று
வைத்த பெயர்
வீணல்ல அவனுக்கு
பட்ட துன்பங்களும்
வீணல்ல
ராமன் என்ற
பெயருக்கேற்ப
சிறப்பான
குணங்கள் படைத்தான்
வையமே அவனோ
என்று வியக்கும்படி
அபூர்வ லயஞனம்
அவனிடம் கண்டனர்
பெற்றோர் எதிர்பார்ப்பு
வீணல்ல
ஏழு வயதில்
அரேங்கேரினான்
அவன் ஒரு
ஏகலவிவன்,
குருவுக்கு
அவன் கண்மணி
அவனை சிஷ்யநாய்
அடைய, அவர்கள்
பெருமிதம்
கொண்டனர்
படிப்பிலும் சிறந்தன்,
சிறு வயதிலேயே
இவனை வளர்க்க
வசதி இல்லையே
என்று கலளிங்கின
பெற்றோர்க்கு
அவனே ஒரு
வசதியானான்
அவர்களுக்கே தெரியாது
எப்படி என்று
அவன் முன்னேறினான்
நாளுக்கு
நாள்
அந்த அறிவுச்சுடர்
பிறர்க்கு
தானே வெளிச்சம்
தந்தது
அந்த அபூர்வ
குழந்தையை
படைத்தவனே
சிறப்பித்தான்
அவனைக் கண்ட
கண்கள் நிலைக்கும்
அவன் பேச்சு
நம் வாயடைக்கும்
குழந்தையே
நீ தெய்வாம்சம்
எங்களுக்கு உதித்த
மானுடனள்ள
எத்தனைப் பிறவி
எடுத்தோமோ?
இத்தனை உயர்ந்த
உன்னை அடைய?
பெற்றோர் மனம்
குளிர
உற்றப் பிள்ளையாய்
அவன் வளர்ந்தான்
அவனுக்கு வைத்தப்
பெயர் வீணல்ல
ராமனே
அவன், சகல
விதத்திலும்
பண்பிலும் ராமன்
பரிசுத்தத்திலும்
ராமனே
சத்யமே அவன்
உருவம்
கள்ளமில்லா வெள்ளை
மனம்
கனவிலும் பிறருக்கு
தீங்கென்னான்
கற்பிலும்
ராமனே
பரிவு மிக்கவன்,
பாசம் நிறைந்தவன்
பல விதத்திலும்
என்னிலும்
உயர்ந்தவன்
இல்லையென்பது அவனிடத்தில்
என்றும் இருந்ததில்லையே
அவன் கண்ணிலும்
கருணை, காலத்தையே
வென்று விடும்
நல்லதொரு குடும்பம்
கொண்டான்
வீட்டில் உற்ற
கணவன் பொறுப்பான
ஒரு தந்தை
அகில உலகிலும்
பேர் பெற்றான்
அவன் முயற்சியிலே
சகலமும்
எங்களுக்கு தெரியாது
என்ன துன்பங்கள்
பட்டானென்று
உன் குறை
தீர்ப்பன்
தன் குறை
சொல்லமாட்டன்
உலகமே புகழும்
நிலை இன்று
ஆனாலும்
மனதளவில் அவன்
ஒரு சன்யாசி
பதவி மோகமில்லாத
பதவிசி என்னென்பேன்
எனக்கு அவன்
தாயானான்,
நான் அவனை
பெற்றவளாயினும்
அவன் அறிவுக்கு
முன்னால்,
நான் ஒரு
துரும்பு
அவனைப் பிள்ளையை
அடைய, நான்
செய்த தவமென்ன?
சூது வாது
அற்றவன் சுயனலமற்றவன்
தெய்வமென எங்களைப்
போற்றும்
தனையன்
அன்று அவனுக்காகப்
பட்ட கஷ்டம்
நான் அவனுக்கு
கொடுத்த விலை
இன்னம் எத்தனை
என்றாலும்
இவனுக்காக நன்
பரவேன்
ஈன்ற பொழுதினிலும்
பெரிதுவப்பாள்
(தன் மகனை)
சான்றோன் எனக்க
கேட்ட தாய்
நானும் ஒரு
தாயாநதால்
இந்த
உண்மை எனக்குத்தகும்
பெற்றாலும் ஒரு
பிள்ளை
இம்மாதிரிப் பெறவேண்டும்
இவனே ஒரு
தெய்வம்
எனக்கெதற்கு வேறு
தெய்வம்