நன்றி
(ஸ்ரீ.விஜயலட்சுமி)
1. நன்றி என்ற சொல்லுக்கு
அர்த்தம் என்ன?
நாயின்
வாலோ
அல்லது
அதன்
கண்ணோ?
ஒளீ
ஒன்று
கண்டேன் வாயில்லா ஜீவனின்
கண்ணில்
கனி
மிகுந்த
பார்வை, அதுதான்
நன்றியோ?
2. என்றோ ஒருநாள்
உணவு
கொடுத்தேன்
அன்றே அதனை
மறந்தும்
போனேன்
இன்று என்னை கண்ட அந்த நாய்
என்
பின்னால்
வாலாட்டி
கொண்டு
தொடர்ந்தது.
3. மலர் செடி ஒன்று நட்டேன்
ஒருநாள்
பல நாள்
பொருத்து
தான்
நீர்
வார்த்தேன்
மறந்தே போனேன்
அந்த
சிறு
கன்றினை
ஒரு நல்ல நாள் சென்றேன் அந்த செடி பக்கம்
4. வண்ண மலர்
ஒன்று
வளர்திருந்தது
அச்செடியில்
கண்ணசைத்து தலை
அசைத்து வாசம் மிகுந்த மலர்
ஒன்று
அழகே
உருவாக மனமே
நிறைவாக
நிழலையும் தந்தது அந்த வளர்ந்த
செடி
5. தாயே வருக என்று நீர் வார்த்தாயே
நீயே என்
அன்னை, உனக்கு இம்மலர்
நீ
சூட்டி கொள் அல்லது பகவானுக்கு அளித்துவிடு
நீயல்லவா
என்னை
வளர்த்தாய் உனக்கு நன்றி.
6. தென்னங்கன்று ஒன்று கேட்பாரற்றுக் காய்ந்தது
என்னால்
ஆந உதவி,
கொஞ்சம் தண்ணீர்
வார்த்தேன் தினம்
பல காலம்
கடந்தது, தென்னை
ஒன்று
உருவானது
காலால்
தன் ஈன்ற நீரிணை,
தலையால் இளநீராக
தந்தது.
7. காய்ந்த நிலம் ஒன்றில்
பள்ளம்
ஒன்று
வெட்டிநேன்
மாய்ந்து மாய்ந்து வெட்டிநேன்,
ஆழம்
தோன்றியது
பள்ளத்தில்
ஈரம்
கொஞ்சம் கண்டேன்
நம்பிக்கை
பிறந்தது மனதில்
பிறருக்கு நீர் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில்
8 நீர் கொஞ்சம்
சுரந்தது, நான் வெட்டிய பள்ளத்தில்
சீராக
தோண்டினேன் இன்னும்
நீர்
வருமென்று
என்னை முதலில்
நனைத்தது இங்கு தோன்றிய நீர்
உனக்கு முதல் அர்ப்பணம்
என்றதோ
அந்த
நீர்
9. பசியால்
துடித்த
நாயோன்றுக்கு
தினம்
கொஞ்சம் அன்னமிட்டேன்
திசைமாறி இருட்டில் வழிதவறினேன்
குடிகாரன் ஒருவன் வழிமறித்தான்
என்னை
திடீரென்று
என் மேல் விழுந்துத்
தள்ளினான்
அலறினேன்
யாரும் வரவில்லை,
பாய்ந்து
உள்ளே
ஓடினர்
பல பேருக்கு
செய்த உபகரங்கள் எனக்கு அன்று உதவவில்லை
ஐயோ
என்று
அலறினான்
குடிகாரன்,
தொடையில் ரத்தம் பீறிட
நான் வளர்த்த
நாய்
அவன்
தொடையில்
கடித்து கொதறியது.
10. குஷ்டரோகி, ஊனமுற்ற
ஒரு பிட்சைக்காரன்
இஷ்டப்படி
வாழ இயலாது அவனால்
இறக்கபட்டேன் அவன்
மேல்
பாவமென்று
அரக்கனென்று அறியாமல்
பரிவு
காட்டினேன்
பலவிதத்தில்
11. இயலாதவன்
என்று
எவனை
எண்ணினேனோ
கயவன்
என்று
உணர்த்தி
விட்டன் ஒரு
நாள்
என்
பரிவை
தனக்கு சாதகமாக
எண்ணிய துரோகி
பின்னால் வா
என்றழைத்தான் ஒரு
நாள்
12. இதை
உணர்ந்து
தான்
பெரியவர்கள்
சொன்னார்களோ?
பாத்திரமறிந்து பிட்சை
இடு என்று அன்று
எந்த பாத்திரம் நல்லதென்று எப்படி நான் அறிவது?
அந்த இறைவன் பதில் சொல்ல
வேண்டும்
இதற்க்கு
13. ஒருவரைக்
கண்டேன் ஒரு
நாள்
உருவம் கொஞ்சம்
கரடு
முரடு
உடம்பெல்லாம்
ரோமம்,
முடி
நிறைந்த
முகம்
திடமான
தேகம்
கனிவு
தெரிந்த
கண்ணில்
14. உருவத்தைக் கண்டு அஞ்சினேன்
அருவருப்பு கொண்டேன் புறத்தொற்றம்
கண்டு
இவன்
பார்வை என்மேலா,
என் உள்ளத்திலா
எவனைக் கண்டாலும் என்
மனதில் ஏன்
அச்சம்?
15. நல்லவர்யார்
கெட்டவர் ஏதும்
எனக்கு விளங்கவில்லை
அல்ல
இவன் அயோக்கியன்
என்று பின்னால் புரிந்து கொண்டேன்
என்னைத்
தொடர்ந்து
என்னைக்
காக்கத்தான்
பின்
வேறு ஒன்றும் அவன் எதிர்பாக்கவில்லை
16. வாய் திறந்து
பேசினதில்லை, வார்த்தை நான் கேட்டதில்லை
மெய் இருக்குமிடத்தில்
வாய்
பேசாது என்று உணர்ந்தேன்
நாய்க்கு மட்டும்
வால்
இருக்கிறது
நன்றி
காட்ட என்றெண்ணினேன்
வாய் திறவாமலே
அன்பு
காட்ட கண்ணுண்டோ மனிதனுக்கு?