நிறங்கள்
          by S. Vijayalakshmi

பச்சோந்தி என்றொரு பிராணியுண்டு

சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறம் மாறும்

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே

 

அதனால் யாருக்கும் துன்பமில்லை

பத்திரமாகத் தன் வரையில் வாழ்ந்துக் கொள்ளும்

கடவுள் அதற்குத் தந்த ஒரு அருள்

 

நிறம் மாறுவது அதற்கே தெரியாது

சிவனே என்று வாழ்ந்துக் கொள்ளும்

மனிதன  மட்டுமே ஏன் அவ்வப்போது

தன் நிறத்தை மாற்றி கொள்கிறான்?

 

கடவுள் கொடுத்தது உடம்பில் ஒரு நிறம்

உள்ளத்தில் பல நிறம் அவன் படைதத்தில்

பச்சோந்தியின் நிறம் தன்னைக் காப்பற்றிக்கொள்ள

மனிதனின் நிறம் பிறரை ஏமாற்ற

 

இமேஜ  ிலை நிறுத்தப்  பல  நிறம் அவனுகுன்டு

நன்னடத்தை, பேச்சு, அசய்வுகள் எல்லாமே

பலவி  ிறங்களின் பூச்சு வேலைகள்

 

உருவத்தில் மட்டுமே ஒரு நிறம்தான்

உள்ளத்தில்   அவனுக்கு பலவித நிறங்கள்

தன்னைக் காப்பாற்ற, பிறரை ஏமாற்ற

மனிதனே விடப் பச்சோந்தி மேல்

 

இது என் எண்ணம் உள்ளதைச் சொன்னேன்

உண்மை என்றால் புரிந்துகொள்

இல்லையென்றால் விட்டுவிடு