புஷ்பம்
         by S. Vijyalakshmi

காலையில் மலரும், மாலையில் உதிரும்

சாலை ஓரம் மலரும் புஷ்பம்

மணம் வீசி மற்றவரை களிப்பாட்டி

கன நேரம் வாழ போவதை

கணமும் சிந்திக்காமல் தலையாட்டி

முக்கல் இல்லை, முனகல் இல்லை

எதிபார்ப்பு இல்லை, ஏக்கம் இல்லை

அழகைப்பற்றி அகந்தை இல்லை

அழியும் அழகில் மயக்கமில்லை

இருக்கும் வரை பிறர்க்கு

இன்பம் கொடு துன்பம் போக்கு

உன் வாழ்வு ,ொஞ்சமே

உள்ளமட்டும் வாழ்ந்து விடு

உன்னப்பறித்து கசக்கி  ஏறியும்

உள்ளம்மில்லா மனிதனுக்குக் கூட

உன்னால் இயன்றதை செய்து விடு

தலையாட்டி மணம் வீசு

அலை அலையாய் நிறம் காட்டி

காலையில் மலர்ந்து மாலை மங்கப் போகும்

நிலையில்லா வாழ்வைப்பற்றி

சிறிதேனும் சிந்திக்காமல் தன்னை

சுள்ளி எரியும் மனிதனுக்குக் கூட

மகிழ்வு தந்து, நெகிழ்வு காட்டி

வா வா என்றழைக்கிராயே

வண்ணப்பூவே என்னிலும் நீ

பெருமைப்பட வாழ்கிறாய்

சிறுமைப்பட்ட மனிதன் நான்