தன்னை
ஈந்து பிறரை வாழவை
By S. Vijayalakshmi
சந்தனம் தான் தேய்கிறது, பிறருக்கு மணம் கொடுப்பதற்கு
விளக்கு வெளிச்சம் தருகிறது, அதன் அடிபாகம் இருட்டு
இரவு நகர்கிறது, பகலுக்கு வழி விடுவதற்காக
பூ மணக்கிறது, தான் அழியும் முன் மாலை ஆவதற்காக
மெழுகுவத்தி தன்னை அழிக்கிறது, வெளிச்சம் கொடுப்பதற்காக
தானியங்கள் தோல் உறிக்கின்றன பிறருக்கு உணவாவதற்காக
கன்றுக்கு ஊட்டாத மாட்டின் பால் மனிதனுக்கு உணவாகிறது
மனிதனின் உணவாக மரம் தன் சேயான காய்கனிகளை தியாகம் செய்கிறது
ஆடுமாடுகள் பிறர்க்கு உணவாக தன் உடலையே அளிக்கிறது
தன் குடும்பத்திற்காக ஒரு பெண் தன் உடல்பொருளை தியாகம் செய்கிறாள்
மனம் உள்ள மனிதர்கள் பிறருக்காகத் தன் சுகதுக்கங்களை தியாகம் செய்கிறார்கள்
ஊதுவத்தி தன்னை அழித்து பிறருக்கு மணம் தருகிறது
கற்பூரம் தான் அழிந்து தீபமாகிறது
வெண்ணை தான் உருகி நெய்யாகிறது
விண்ணிலிருந்து மழை தான் இறங்கி தரையில் விழுந்து நீராகிறது
உணவுப் பொருள்கள் யாவும் தன்னை அக்னியில் அழித்துதான் உணவாகிறது
மண் புழு செடிகளுக்கு எருவாகிறது
தேனீ எங்கெங்கோ தேடி அலைந்து தேன் சேகரிக்கறது.
அதற்குக் கூட இல்லாமல் மனிதன் அதனை உணவாக்குகிறான்
புழ்பங்கள் தாய் செடியிடமிருந்து பிரிக்கப்பட்டு மாலைஆகிறது
மனம் மனிதர்கள் மட்டும்?