தேரையே உன்னை வணங்குகிறேன்
By S.
Vijayalakshmi
ஒரு சின்ன சந்து, அதற்குள் ஒரு சிறு உருவம்
சிறு காலே ஒரு நாள், அங்கு உன்னைக் கண்டேன்
பயந்து பயந்து எட்டிப் பார்த்தாய்
பயப்படாதே என்னைக் கண்டு
உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்
என் அருமை தேரை குட்டி
உன்னைப் படைத்தவன், என்னையும் படைத்தான்
அதில் ஒரு வித்யாசம், மேலான ஜென்மம்
ஆவாள் என்று என்னைப் படைத்தான்
அவனுக்கென்ன தெரியும்? அவனையும் நான்
ஏமாற்றலாம் என்பது பற்றி?
அவன் படைத்த உன்னை நான்
என்றேனும் ஒரு நாள் கொல்லுவேனென்று
ஐயோ பாவம் தேரை குட்டி
நான் அப்படி செய்ய மாட்டேன்
எனக்கென்று ஒரு மனம் உண்டு
பாசம் காட்ட குழந்தைகள் உண்டு
இப்ப நீ வளர்ந்து விட்டாய்
அனால் ஒரு சந்தேகம்
உன்னுருவம் பெரிதாக ஒருநாள் வளரும்
உடல் கொஞ்சம் வளர்ந்து விட்டது
பொந்து மட்டும் அதே அளவு
இவ்வளவு பெரிய உடலை நீ
எப்படி உள்ளே நுஷைக்கிறாய்?
என்னிலும் மேலான தேரையே
உன்னிடம் கற்க நிறைய இருக்கு
என்னை கொஞ்சம் எறேடுதுப்பார்
ஏனிப்படி அஞ்சி ஓடுகிறாய்?
தேரை தானே என்று நான்
உன்னைத் தள்ளிவிட மாட்டேன்
தேய்ந்து மாயும் மனித சமுகத்தில்
நானும் ஒரு அங்கமென்றாலும்
எனக்கும் மற்றவர்க்கும் வித்யாசமுண்டு
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்
கன்னம் வைக்கும் கள்ளனைப் போலே
உன்னைக் சுருக்கிக்கொள்ளதே
கூட்டுக்குள் புகுந்துக் கொள்ளாதே
இவ்வளவு பெரிய உடலை எப்படி
சிறிய பொந்துக்குள் நுழைக்கிறாய்?
சிந்தையை அடக்கினால் எல்லாம் முடியும்
எந்தையர் சொன்னார்கள் அன்று இதற்க்குதானோ?
மனதை அடக்கும் திறனில்லாத
மானுடப் பிறவிகள் முன் நீ
மாசில்லாத மகான் ஆனாய், நீ ஒரு சன்யாசி
மறுபடியும் சொல்வேன், நான் உன் நண்பன்
தைரியமாகக் கிட்டே வா, உன்னை ஏதும் செய்ய மாட்டேன்
என் அருமை தேரையே
என்னை உனக்கு பிடிக்கிறதா?
அப்படியானால் நாளை முதல் நான்
அங்கு உனக்குக் காத்திருப்பேன்